Wednesday, April 15, 2015
இராமநாதபுரம் அருகே சாலை விபத்து! 7 வாலிபர்கள் பலி!!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி
அருகே இன்று மாலை நடந்த ஒரு விபத்தில் ஒரு பொலிரோ ஜீப்பும் ஒரு சுவிஃப்ட் காரும்
மோதிக்கொண்டன. இவ்விபத்தில் இது வரை 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒரு வாகனத்தில்
காரைக்குடியில் இருந்து இராமேசுவரம் சென்றுவிட்டு திரும்பிய இளைஞர்கள்
இருந்துள்ளனர் மற்றொரு வாகனத்தில் மனக்குடியை சேர்ந்த இரன்டு நபர்கள்
வந்துள்ளனர். இரன்டு வாகணங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ
இடத்திலேயே 4 பேரும் மருத்துவமனயைில் 3 பேருமாக 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும் ஒருவர் கால்
முறிந்த நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளனர் அதில் ஒருவரின் கால் துன்டாகியுள்ளது.
செய்தி: ரைசுதீன், திருப்பாலைக்குடி
No comments :
Post a Comment