(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 23, 2015

கீழக்கரை நகராட்சி கூட்டம்! 67 தீர்மானங்கள் நிறைவேற்றம்! திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!!

No comments :
கீழக்கரை நகராட்சி கூட்டம் இன்று காலை நடை பெற்றது.

தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலையில், கமிஷனர் செ.முருகேசன் வரவேற்றார்.


மொத்தம் 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளின் குறைகளை தெரிவித்தனர்.

திமுக கவுன்சிலர் திரு. ஹாஜா முகைதீன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு:

நகராட்சியில் ஒன்றறை கோடி நிதி உள்ளது. அதை வைத்து டெண்டர் விட்டுள்ளீர்கள். ஆனால், தலைவரிடம் கேட்டால் நிதிப் பற்றாக்குறையாக உள்ளது, என்கிறார்.
மண்புழு உரம் தயாரிக்க ஜே.சி.பி., இயந்திரத்திற்கு ரூ.40,000 வாடகை வழங்க வேண்டிய இடத்தில் ரூ.1,35,000 வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தட்டாந்தோப்புதெரு, புதுபஸ் ஸ்டாண்ட், புதுக்குடியில் உள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷனில் 3 பேர் பணியில் உள்ளனர். ஆனால், 6 பேருக்கான ஊதியம் வருடத்திற்கு ரூ.7 லட்சம் எடுக்கப்படுகிறது.
நகராட்சி தலைவரின் ஜீப் டிரைவருக்கு வருட ஊதியமாக ரூ.1,04,000 ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செலவு செய்கின்றனர். ஆனால், நிரந்தர பணியிட டிரைவர் தான் அந்த ஜீப்பை ஓட்டுகிறார். நகராட்சி பணம் முறைகேடாக வீணடிக்கப்படுகிறது, என்றார்.

வார்டு குறைகளை கூறுங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று பதிலளிக்கப்பட்டது, மற்ற குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலில்லை.

கீழக்கரை முக்கிய சாலைக்கு, மறைந்த புரவலர், திரு. பி.எஸ் அப்துல் ரஹ்மான் பெயரைச் சூட்டுவது,
நகராட்சி மன்றத்தை இலவசமாக அளித்த செ.மு.ஹமீது அப்துல் காதர் அவர்களின் பெயரை மன்ற அவைக்கு அறிவிப்பது,
நகரின் முக்கிய இடங்களில் பொது கழிப்பறை தேவை உள்ளிட்ட 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


No comments :

Post a Comment