Thursday, April 23, 2015
மதுரை- துபாய் விமானத்தில் இயந்திரக்கோளாறு. 182 பிரயாணிகள் உயிர் தப்பினர்!
மதுரையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது.
இதனால் அதிர்ஷ்டவசமாக 182 பேர் உயிர் தப்பினர்.
துபாய் விமானம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துபாய்க்கு 175 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் சென்னை வான் எல்லையில் இரவு 10.45 மணிக்கு வந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், சென்னையில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்கும்படியும் கோரினார்.சென்னையில் தரை இறங்கியது
இதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3½ மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.
அதன் பின்னர் நள்ளிரவு 2.15 மணிக்கு விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் விமானத்தில் இருந்த 182 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
செய்தி உதவி: விகளத்தூர்.காம்
No comments :
Post a Comment