(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 17, 2015

இராமநாதபுர மாவட்ட MLA ஜவாஹிருல்லாஹ் உட்பட 291 பேர் கைதாகி விடுதலை

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உள்பட 291 பேரை போலீசார் கைது செய்தனர். 


ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் தனியார் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று மாலை வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே அவர்களை ராமநாதபுரம் டி.எஸ்.பி.,(பொ) சேகர், இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், பெரியசாமி தலைமையிலான போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். எம்.எல்.ஏ., மற்றும் பெண்கள் 69 பேர் உட்பட 291 பேர் கைது செய்யப்பட்டனர்.  

முற்றுகைப் போராட்டத்திற்கு ம.ம.க., மாவட்டச் செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, த.மு.மு.க, மாவட்டச் செயலாளர் அன்வர்அலி, திருப்புல்லாணி ஒன்றிய த.மு.மு.க., தலைவர் ரைஸ் இப்ராகீம், ராமநாதபுரம் நகர் செயலாளர் பிஸ்மி என்ற நசிருதீன், கீழக்கரை நகர் தலைவர் சிராஜூதீன், நகர் ம.ம.க., செயலாளர் ஜஹாங்கீர் மற்றும் ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ., உள்ளிட்ட 291 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment