Tuesday, March 24, 2015
FACEBOOK , TWITTER ல் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இனி கைது இல்லை!!
FACEBOOK , TWITTER போன்ற சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய
கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை
விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல்
தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு
செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசு 2008
ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில்
சேர்க்கப்பட்ட 66 ஏ
பிரிவின் படி, சமூக
வலைதளம், மின்
அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை
சிறையிலடைக்க முடியும்.
இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை.

No comments :
Post a Comment