(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 4, 2015

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்குபெற்ற திருப்புல்லாணி நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

No comments :
திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் பங்கேற்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியத்தில் அரசு உதவிபெறும் மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில்
இப்பள்ளியின் 30 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நாடார் மஹாஜன சங்க பள்ளியின் நிர்வாக இயக்குனர் திரு.D,பால்பாண்டி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாடார் மஹாஜன சங்க பள்ளியின் தாளாளரும் செயலாளருமான திரு.M.ஜெயக்குமார் B.E., அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்கண்ணு M.A, M.Ed., அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.V.சாந்தி M.A, M.Ed., அவர்களும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.S.ஜெஸிந்தா M.A., M.Ed., அவர்களும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் கலந்து கொண்டு இப்பள்ளியின் அறிவியல் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும்போது எனது ராமநாதபுரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.12.00 ( பணிரெண்டு லட்சம் ) செலவில் இப்பள்ளிக்கு அறிவியல் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் இப்பகுதியில் மட்டுமின்றி சட்டமன்ற தொகுதி முழுவதும் கல்வி நிலையங்களுக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய்.1,68,000,00.00 ( ஒரு கோடியே அறுபத்தி எட்டு லட்சம் ) இதுவரையிலும் கல்வி மேம்பாட்டுக்காக நிதி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்கள்.
இப்பள்ளியின் முன்னாள் தாளாளரும் பாண்டியனார் தொழிற் சங்க தலைவருமான வேதாளை திரு.S.சதாசிவம் அவர்கள் கூறும்போது இதுவரை எத்தனையோ மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் கண்டுள்ளோம் ஆனால் இப்பள்ளியை யாரும் ஏறெடுக்காத நிலையில்
நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி கோரிக்கை மனு அளித்தபின் அதை கனிவோடு பரிசீலித்து இன்று நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினரின் தன்னலமற்ற சேவைகளையும் பணிகளையும் மிகவும் பாராட்டி அதற்காக நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இந்தநிகழ்வில் நாடார் மஹாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல் ராஜ் அவர்களும், ராமநாதபுரம் & சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சம்மேளன பெருந்தலைவர் திரு.S.பாலசிங்கம் அவர்களும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும், இப்பள்ளியின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியபெருமக்கள், உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் சகோ.B.அன்வர் அலி, பக்கர் அலி, நூருல் அஃப்பான்,
திருப்புல்லாணி ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.
முடிவில் இப்பள்ளியின் கமிட்டி உறுப்பினர் திரு.R.மாணிக்கம் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

செய்தி; MLA அலுவலகம், இராமநாதபுரம்

No comments :

Post a Comment