Saturday, March 21, 2015
ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!!
ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயில் வாரம் மூன்று முறை
இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் வழியாக பயணப்படும் இந்த விரைவு ரயிலை
பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ராமேசுவரம்-திருப்பதி விரைவு
ரயிலில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக் குறிப்பு:
ரயில் எண் 16780/16779:
ராமேசுவரம்- திருப்பதி-
ராமேசுவரம் வாரம் மூன்று முறை விரைவு ரயிலில் நிரந்தரமாக 2-ஆம்
வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி மார்ச் 24-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.
No comments :
Post a Comment