Wednesday, March 4, 2015
கீழக்கரையைச் சார்ந்த போலி மருத்துவர் ஏர்வாடியில் கைது
கீழக்கரை நடுத்தெருவைச் சேர்ந்தவர்
தாவூத் இப்ராகீம் மகன் அகமது யாசீன் (45). இவர், 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு,
ஏர்வாடியில் உள்ளதனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து
வந்துள்ளார். இந்நிலையில், அந்த மருத்துவமனை மருத்துவர் வராததால்,
அகமதுயாசீன் பொதுமக்களுக்கு தானாகவே மருத்துவ சிகிச்சை
அளித்துள்ளார்.
இது குறித்து, ஹலோ போலீஸூக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து,
ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி
தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு
அகமதுயாசீன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டது. உடனே,
அவர் கைது செய்யப்பட்டார். ஏர்வாடி போலீஸார்
வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment