Tuesday, March 31, 2015
மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் விழா!!
ராமநாதபுரத்தை ஆண்ட மாமன்னர் ரிபெல்
முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்
என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை பேசினார்.
ராமநாதபுரத்தில் மாமன்னர் ரிபெல்
முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை
வகித்து, அவரது
உருவப்படத்தை திறந்து வைத்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:
தேசத்தின் விடுதலைக்காக பலர்
போராடியிருந்தாலும் அவர்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்களுள் ஒருவர் மாமன்னர்
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப்
போரிட்டமைக்காக 24 ஆண்டுகள்
சிறையிலேயே கழித்ததுடன் அங்கேயே உயிரையும் இழந்தவர். இவரது தியாகத்தை இளைய
தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். பின்னர் மாமன்னர்
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில்
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும்,
பரிசுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
No comments :
Post a Comment