(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 5, 2015

தொண்டி பள்ளிக்கு சாலை அமைத்துதரப்படும் எம்எல்ஏ தகவல்

No comments :
தொண்டி யில் உள்ள அரசு பள்ளிக்கு சாலை அமைத்து தரப்படும் என எம்எல்ஏ சுப.தங்கவேலன் தெரிவித்தார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்து நேற்று தொண்டியில் கட்சியினர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ சுப. தங்கவேலன் பேசியது: எம்எல்ஏ நிதியிலிருந்தது நடப்பு ஆண்டில் தொண்டி பேரூராட்சிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட குப்பை அள்ளும் எந் திரம் வழங்கப்பட உள்ளது. பி.வி.பட்டினத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் நிழற் குடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மழை காலங்களில் திடல் முழுவதும் தண்ணீர் தேங்கி விடுவதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க மதுரை-தொண்டி சாலையிலிருந்து பள்ளி வளாகத்தில் சாலை போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் இப்பகுதியில் ரேசன் கடை உட்பட பல பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித் தார். கூட்டத்தில் திருவா டானை ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன், தொண்டி நகர் செயலாளர் முகமது அலி ஜின்னா, இஸ்மத் நானா, சவுந்திரபாண்டியன், காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் எம்வி.பட்டினத்தில் நிழற்குடை கட்டவிருக்கும் இடத்தை எம்எல்ஏ பார்வையிட்டார்.

No comments :

Post a Comment