Wednesday, March 4, 2015
தனி வீடுகள் விற்பனை -ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில்,
ஆட்சியர் அலுவலகம் அருகே 92
தனித்தனி வீடுகள் விற்பனைக்கு வர
இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(file photo)
ராமநாதபுரம்
வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பி.
சுந்தரமூர்த்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர்,
அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில், பட்டினம்காத்தான் பகுதி-2 சுயநிதித் திட்டத்தின் கீழ், மத்திய வருவாய்ப் பிரிவினருக்கு தனித்தனியாக
92 வீடுகள்
கட்டப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன. எனவே, பொதுமக்களிடமிருந்தும், அரசு ஊழியர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை வரவேற்கிறோம்.
இது,
3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு
விற்கப்படுகிறது. முதல் பிரிவில், 28 வீடுகள் தலா ரூ. 24.51 லட்சம், 2ஆவது பிரிவில் தலா ரூ. 24.59 லட்சம், 3ஆவது
பிரிவுக்கான வீடுகள் தலா ரூ. 25
லட்சம் செலவிலும் கட்டப்படுகின்றன.
ஒவ்வொரு வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுகிறது. அடுக்குமாடி வீடுகளாக
இல்லாமல், பொதுமக்களின் விருப்பப்படி தனித்தனி வீடுகளாகவும் கட்டப்பட
உள்ளன.
விண்ணப்பித்தவர்களில் தேர்வு
செய்யப்படுவோர் அதற்கான ஒதுக்கீடு பெற்றவுடன், 5 சதவிகித தொகையினை ஆணை கிடைக்கப் பெற்ற 21
நாள்களுக்குள்
செலுத்த வேண்டும். மீதமுள்ள 90
சதவிகித தொகையினை 7
தவணைகளாக அடுத்தடுத்து வரும் 3
மாத காலங்களுக்குள் செலுத்திட வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல்
விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 3.4.2015
வரை பெற்றுக் கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம். அல்லது 04567-220611 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
No comments :
Post a Comment