(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 22, 2015

காயல்பட்டினத்தைச்சார்ந்த மவ்லவீ ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர், வழக்குகளிலிருந்து விடுதலை!

No comments :
குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரமில்லாததாகக் கூறி, காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து, ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- 

கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (புனித ரமழான் மாதம் 27ஆம் நாளன்று) மிகப்பெரிய சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உட்பட 12 பேர் - காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில், கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கு மீதான விசாரணை 23.02.2015 அன்று முடிவுக்கு வந்தது. நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பில் - ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர் குற்றமற்றவர்கள், நிரபராதிகள், அவர்களுக்கெதிரான எந்த வாதங்களும், சாட்சியங்களும் நிலை நிற்கவில்லை என்றும், எனவே அவர்களை விடுதலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம், எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- P.M.N.ரியாஸுத்தீன்

செய்தி: காயல்பட்டினம்.காம்

No comments :

Post a Comment