Monday, March 23, 2015
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா - எம்.பி. அ.அன்வர்ராஜா பங்கேற்பு
ஏழை மாணர்கள் அரசின் திட்டங்களை
பயன்படுத்தி தங்களது கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என சனிக்கிழமை எம்.பி.
அ.அன்வர்ராஜா பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற
மாணவி, மாணவிகளுக்கு
பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு அ.அன்வர்ராஜா எம்.பி.
பேசியதாவது:
கல்வியின் தரம் உயர்ந்து மற்ற
மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நமது மாநிலம் உள்ளது. வறுமை நிலையில் உள்ள
மாணவர்கள் அரசின் திட்டங்களால் தங்களது கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்ள
வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு
பல நலத் திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது என பேசினார்.
விழாவில் பள்ளிவாசல் ஜமாத்தலைவர்
ஏ.காதர்மைதீன், மாவட்ட
ஊராட்சிக்குழு தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ரஹ்மானிய ஐ.டி.ஐ நிறுவனர் அப்துல்காதர்,
கல்விக்குழுத் தலைவர் ஏ.ஷாஜகான் ஆகியோர்
மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளித் தாளாளர் எம்.எஸ்.சௌக்கத்அலி
வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர்
சசிவர்ணம், துணைத்தலைவர்
பாசில் அமீன், ஒன்றியக்குழு
தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, ஒன்றிய இளைஞரணிச் செயலர் தூரி.எம்.மாடசாமி உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான்
செய்திருந்தார்.
செய்தி: தினமணி
படம்: திரு ஹிதாயத்
No comments :
Post a Comment