(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 17, 2015

தாலுகா அலுவலகங்களில் இ-சேவை, மக்கள் வரவேற்பு

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இ சேவை மூலம் அனைத்து சான்றிதழ்களையும் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. இம்மையம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் செயல்படுகிறது. இதுவரை 347 பேர் விண்ணப்பித்ததில் 162 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மையத்தில், விண்ணப்பித்தவருக்கு சான்றிதழ் தயாரானதும் அவரது செல்லிடப் பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்யவும், பாஸ்போர்ட் பெற காவல்துறையினர் வழங்கும் சான்றிதழுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டுக் கழக தவணைத் தொகை செலுத்துதல் போன்றவற்றுக்கும் இம்மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சான்றிதழ்கள் தயாராகி விடுகின்றன.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியது:
இச்சேவை மையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்களின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களுக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் எவ்வித அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் பொதுமக்கள் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment