Monday, March 23, 2015
54 தமிழக மீனவர்கள் விடுதலை.
இலங்கை சிறைகளில்
அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை
அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை
நாளை நடைபெற உள்ள நிலையில் 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். ராமேஸ்வரத்தை
சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படையினரால்
கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வருகின்ற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க
மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அவர்களை வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நாளை சென்னையில் நடைபெறும் நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது எப்படி சரியாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனிடையே தமிழக-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற
இருப்பதை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 54 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு
இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.
COURTESY: ONE INDIA
COURTESY: ONE INDIA
No comments :
Post a Comment