Monday, March 30, 2015
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா!!
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி இயக்குனர் ஜகுபர் புகாரி தலைமை வகித்தார். முதல்வர் முகம்மது ஜகாபர் ஆண்டறிக்கை வாசித்தார்.
511 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலை துணைத் தலைவர் ஸ்ரீராம் ராமகிருஷ்ணன் பேசுகையில், “”இன்றைய மாறி வரும் நாகரீக காலங்களில் சுத்தமான காற்று, குடிநீர் ஆகியவை அமைவது கடினமாக உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார்.
கார்த்திக் ஸ்ரீதர், சென்னை போர்ட் கார் நிறுவன துணைத்தலைவர் அருள் ராஜ்குமார், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் மற்றும் அனைத்துத்துறை தலைவர்களும், பேராசிரியர்கள் பங்கேற்றனர். 40 மாணவர்கள் அண்ணா பல்கலை தரவரிசையில் இடம் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர் கணேஷ்குமார், மயில்வேல்நாதன், கார்த்திகேயன் மற்றும் பி.ஆர்.ஓ., நஜ்முதீன் செய்திருந்தனர்.
No comments :
Post a Comment