Monday, March 16, 2015
மார்ச் 20 மற்றும் 21 ம் தேதிகளில் துபாயில் குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம்
வருகின்ற மார்ச் 20
மற்றும் 21 ம் தேதிகளில் துபாயில் உள்ள துபை மீடியா சிட்டியில் உள்ள
அம்பி தியேட்டரில் குழந்தைகளுக்கான குதூகல நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான
ஓட்டப் பந்தயம் நடத்தப் பட உள்ளது. காலை 9.30 மணி அளவில் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் காலை 9.45
மணி அளவில் 4
முதல் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஓட்டப் பந்தயம்
நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான
பொழுது போக்கு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியை மொபைல் சேவை வழங்கும்
எடிசலாட் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்துகிறது.
மேலும் தகவலுக்கு: http://www.etisalatkidsrun.com/
No comments :
Post a Comment