Thursday, March 5, 2015
வாழ்க்கையின் திருப்புனை தேர்வான +2 தேர்வுகள் இன்று துவங்கியது
இன்று துவங்கியது பிளஸ்2 தேர்வில் இராமநாதபுர மாவட்டத்தில் 14 ஆயிரத்து 933 மாணவ, மாணவிகள்
பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பிளஸ்2 தேர்வு இன்று தொடங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் கல்வி
மாவட்டத்தில் 25 மையங்கள், பரமக்குடி கல்வி
மாவட்டத்தில் 20 மையங்கள் என மொத்தம் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆயிரத்து 960 மாணவர்கள், 7 ஆயிரத்து 973 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 933 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
(கோப்பு படம்)
வினாத்தாள் மையங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், மின் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

வாழ்த்துக்கள் மாணவர்களே. வென்று வாருங்கள்.!!
No comments :
Post a Comment