முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 31, 2015

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் விழா!!

No comments :
ராமநாதபுரத்தை ஆண்ட மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை பேசினார்.

ராமநாதபுரத்தில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, அவரது உருவப்படத்தை திறந்து வைத்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:
தேசத்தின் விடுதலைக்காக பலர் போராடியிருந்தாலும் அவர்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்களுள் ஒருவர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டமைக்காக 24 ஆண்டுகள் சிறையிலேயே கழித்ததுடன் அங்கேயே உயிரையும் இழந்தவர். இவரது தியாகத்தை இளைய தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். பின்னர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசுகளையும் ஆட்சியர் வழங்கினார்.

கீழக்கரையில் நாளை 1.04.2015 அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்

No comments :
கீழக்கரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும், அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நாளை  1.04.2015 (புதன்கிழமை) அன்று கீழக்கரை உசைனியா கல்யாண மஹாலில் நடைபெறுகிறது.


பொதுமக்கள் இதை தவறாது பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்று முதல் FLY DUBAI ”துபாய்- சென்னை” புதிய வான் வழித்தடம்!!

No comments :
துபாய் அரசுக்கு சொந்தமான (FLY DUBAI) “ஃபிளை துபாய்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் இன்று முதல் (31.03.2015) துபாய் சென்னை இடையே விமான போக்குவரத்தை துவக்கவுள்ளது. துபாய் சென்னை வான்வழித்தடத்தையும் சேர்த்து 46 நாடுகளில் தனது 89வது சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


துபாய் புறப்பாடு: இரவு 22.05 மணி
சென்னை வருகை: அதிகாலை 4.00 மணி

சென்னை: புறப்பாடு: அதிகாலை 4.45 மணி
துபாய் வருகை: மாலை 7.35 மணி


செய்தி: FLY DUBAI

கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” பள்ளியில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம்!!

No comments :
கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” பள்ளியில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம்!!


செய்தி: திரு.MMK இப்ராஹீம், தாளாளர், இஸ்லாமியா கல்வி நிறுவனம்

Monday, March 30, 2015

ஷார்ஜா PETROFAC நிறுவனத்தில் ELECTRICAL ENGINEER வேலை வாய்ப்பு!1

No comments :


Job Description

SHJ-EN-JBD-E-1477 Rev 1

Position Title:
Job Code

Grade

Department

Location

Reports To:
Engineer I - Electrical

-

-

Engineering - Electrical

Muscat/Sharjah

Senior Engineer

/Principal Engineer

1.

Scope of Responsibilities

Operate as part of a team of engineers and designers in carrying out electrical detailed engineering works and provide necessary technical information for procurement in compliance with tender specifications/data sheets and within budgeted man-hour and project schedules.

2.

Primary Duties

S

Assist in the preparation of the Technical Document Register (TDR), identify requirements and scope of work; review specifications and Data Sheets, Piping & Instrumentation Diagrams (P&ID’s), Plot plans, General Arrangement (GA) drawings, Review Philosophies, Area Classification Drawings and other relevant documents

S

Prepare the design basis, single line-diagrams, equipment and cable sizing calculations and other material and equipment analysis for client approval.

Prepare Carry Out short circuit load flow, voltage dips and transient stability studies using ETAP software. Perform design calculations for earthing, lightning protection, lighting, relay settings etc.

S

Assist in the organization and guidance of designers in the preparation of equipment and material specifications and data sheets, administer the development of detailed engineering calculations and drawings including the preparation of load list/schedules Single Line Diagrams, Schematic Diagrams, Logic Diagrams, Cable Schedules and Cable Drum Schedules, Interconnection Schedules, Hazardous Area Classification, Equipment Lay-outs, Cable Routing and Lay-out Drawings, Cable Trench/Tray Lay-out Drawings, Lighting System Lay-out and Details, Earthing/Lighting System Lay-out and Details, Heat Tracing Lay-out and Details, Installation Standard Drawings, Relay Coordination Drawings and other required documents.

S

Prepare technical inquiry requests (Inquiry Requisitions) to vendors, participate in the technical evaluation of vendor bid offers. Perform Technical Bid Evaluations (TBE), review vendor drawings and documents.

Ensure vendor equipment specifications meet with client equipment specifications and are within budgeted costs.

S

Assist in the review of plot plans; organize the issuance of engineering drawings and technical documents for Inter-Discipline Checks (IDC’s) coordinate with other engineering discipline in the integration of technical data inputs.

S

Prepare Purchase Requisitions for the procurement of equipment and materials.

Ensure materials are obtained within scheduled timeframes and budgeted costs.

S

Perform related duties as and when directed by Direct Supervisor.

3.

Job/Cost Impact

Assists in the detailed technical work, cost/delivery impact situations are reviewed by

Supervisors

4.

Decision Making Authority

Decisions limited to the technical scope of project and specifications, consults with Supervisor on main issues which may affect layout and deviations from equipment specifications.

5.

Supervisory Responsibility

Supervise Designers and Engineers of Grade-I as per requirement

6.

Work Contacts

Engineering Discipline Supervisors

Other Discipline Engineers

Project Managers

Project Control

Procurement and Expediting

Client Representatives

Vendor Representatives

Commissioning Personnel

Construction Personnel

Subcontractor Representatives

Rarely

When Required

Rarely

When Required

When Required

When Required

When Required

Rarely

Rarely

Rarely

7.

Competencies/Knowledge, Skills and Abilities

Refer to HR/ OD – Competency Management System (CMS)

8.

Physical Effort and Work Environment

Duties performed in Main Office mostly in air-conditioned surroundings. Occasionally incumbent would require traveling to sites and occasionally visiting vendor workshops.

9.

Minimum Requirement

Bachelor Degree in Electrical Engineering with a minimum of 2 years experience preferably in an petrochemical environment/engineering consultancy Or Diploma in Electrical engineering with minimum 5 years experience in engineering Consultancy/EPC.

Job

Electrical

Primary Location

UAE-Sharjah-Petrofac Towers, Al Khan Road

Organisation

Electrical

Schedule

Full-time

Closing Date (Period for Applying) - External

May 2, 2015, 11:59:00 PM

TO APPLY: CLICK HERE

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா!!

No comments :
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி இயக்குனர் ஜகுபர் புகாரி தலைமை வகித்தார். முதல்வர் முகம்மது ஜகாபர் ஆண்டறிக்கை வாசித்தார்.


511 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலை துணைத் தலைவர் ஸ்ரீராம் ராமகிருஷ்ணன் பேசுகையில், “”இன்றைய மாறி வரும் நாகரீக காலங்களில் சுத்தமான காற்று, குடிநீர் ஆகியவை அமைவது கடினமாக உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார். 

கார்த்திக் ஸ்ரீதர், சென்னை போர்ட் கார் நிறுவன துணைத்தலைவர் அருள் ராஜ்குமார், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் மற்றும் அனைத்துத்துறை தலைவர்களும், பேராசிரியர்கள் பங்கேற்றனர். 40 மாணவர்கள் அண்ணா பல்கலை தரவரிசையில் இடம் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர் கணேஷ்குமார், மயில்வேல்நாதன், கார்த்திகேயன் மற்றும் பி.ஆர்.ஓ., நஜ்முதீன் செய்திருந்தனர்.

பெரியபட்டினம் ஊராட்சி சார்பில் பேராசிரியர். திரு. ஜவாஹிருல்லாஹ் MLA ,அவர்களுக்கு நன்றி அறிவிப்பு!!

No comments :
பெரியபட்டினம் மக்களின் தேவையறிந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து திட்டங்களை நிறைவேற்றி தந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு:

Sunday, March 29, 2015

திரு.அப்துர்ரஹ்மான் எக்ஸ்.எம்.பி. அவர்களுக்கு இன்று டாக்டர் பட்டம்!!

No comments :
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினரும்,
காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான, திரு.அப்துர்ரஹ்மான் எக்ஸ்.எம்.பி. அவர்களுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.



பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகம் இப்பட்டத்தை வழங்கியது .


செய்தி: திரு.ரஹ்மத்துல்லாஹ், முத்துப்பேட்டை


1ஆம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு!

No comments :
வரும் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து விடுவிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ''1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் '2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம்' ( தமிழ்நாடு சட்டம் எண்.13/2006) பிரிவு 2 (e) (iv)ன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 2015-2016 ஆம் கல்வியாண்டிலிருந்து 1ஆம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ள்து. 

அதன்படி 2015-2016 ஆம் கல்வியாண்டில் பல்வேறு வாரியங்களை சார்ந்த அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை 1 ஆம் வகுப்பில் நடைமுறைப்படுத்தவேண்டும். 

எனவே, 1ஆம் வகுப்பு தமிழ் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை மற்றும் மதுரை வட்டார அலுவலகத்தில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சென்னை வட்டார அலுவலகத்திலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மதுரை வட்டார அலுவலகத்திலும் பாடநூல்களை பெற்றுக்கொள்ளலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

வலியவன் - தமிழ் திரை விமர்சனம்

No comments :
எது வலிமை? யார் வலியவன்? இந்தக் கேள்விகளை அழுத்தமாக எழுப்ப முயற்சிக்கிறார் இயக்குநர் சரவணன்.
சென்னை ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் வினோத் (ஜெய்), ஒரு சுரங்கப்பாதையில் சுமியை (ஆண்ட்ரியா) சந்திக்கிறார். பார்த்தவுடனே ஆண்ட்ரியா ஜெய்யிடம் காதலை சொல்ல, ஜெய் ஆடிப்போகிறார். சுதாரித்துக்கொண்டு திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பெண்ணைக் காணோம். எதற்காக அந்தப் பெண் நம்மிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்ற அவஸ்தையுடன் ஆண்ட்ரியாவைத் தேடி அலைகிறார் ஜெய்.
சலிக்கும் அளவுக்குக் கண்ணாமூச்சி விளையாடிய பிறகு ஆண்ட்ரியாவே வந்து சந்திக்கிறார். உன்னை எனக்கு முன்பே தெரியும்என்கிறார். ஃபிளாஷ்பேக் தொடங்குகிறது. ஆரம்பிக்கும்போது ஆச்சரியப்படவைக்கும் பின்கதை முடிவதற்குள் பொறுமையைச் சோதித்துவிடுகிறது. இதில் பாட்டு வேறு...
ஆண்ட்ரியாவிடம் ஜெய் காதலைச் சொல்ல, அவர் நழுவப் பார்க்கிறார். விடாமல் துரத்தும் ஜெய்யிடம் ஆண்ட்ரியா ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். ஒரு ஆளை அடிக்க வேண்டும்என்பதுதான் அந்த நிபந்தனை. அந்த ஆள் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரன். ஆனாலும் ஜெய் ஒப்புக்கொள்கிறார். அதற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார். அதற்குக் காரணம் காதல் மட்டுமல்ல.

குத்துச் சண்டை வீரனுக்கு எதிராக ஜெய்யை ஆண்ட்டிரியா களமிறக்குவதற்கும் அதை ஜெய் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கும் என்ன காரணம்? ஜெய்க்கு ஜெயம் கிடைத்ததா? எப்படி அது நிகழ்ந்தது?
நீதிக்குப் புறம்பாகத் தவறு செய்யும் பட்சத்தில் வலியவனாக இருந்தாலும் பலம் இல்லாதவர்களிடம் கூடத் தோற்க வேண்டி இருக்கும் என்பதுதான் வலியவனின் அடிப்படை. கருத்து என்ற அளவில் கவரும் இந்த ஒரு வரிக் கதையைச் சொல்ல இயக்குநர் சில வலிமையான காட்சிகளை வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு இரண்டாம் பாதி வரும் வரை நீங்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
பெரும்பாலான படங்களில் இடைவேளையின்போது பதற்றம், ஆர்வம் போன்ற ஏதாவது ஒரு உணர்வு வரும். ஆனால் அப்படி எந்த உணர்வையும் சரவணன் நமக்குத் தரவில்லை. வலுவான ஒரு காரணத்துக்காக நாயகனுக்கு உத்வேகமூட்டிச் செயலில் ஈடுபடுத்துகிறாள் நாயகி. இது ஏன், எப்படி நடக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகின்றன. முதல் பாதி? நேரத்தைக் கடத்தவே பெருமளவில் பயன்பட்டிருக்கிறது. அதிலும் அந்த இரண்டு பயணங்கள் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன.
ஜெய் குடும்பத்தின் சூழலைக் காட்சிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது. அழகம் பெருமாள், ஆண்ட்ரியாவுக்கு இடையில் உள்ள நட்பு அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இது கொஞ்சம் புதுசு. ஷாப்பிங் மால் திரையரங்கில் நடக்கும் சண்டையும் அதைப் பற்றிப் பின்னால் பேசப்படும் வசனங்களும் அழுத்தமாக உள்ளன.
பாடல்கள் படமாக்கப்பட்டுள்ள விதம் நன்று. ஆனால் பாடல்கள் முணுமுணுக்கும்படி இல்லை என்பதோடு, எந்தப் பாடலும் திரைக்கதையில் ஒட்டவில்லை. இசை இமானா? தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. இரவு நேரப் பயணம், சண்டைக் காட்சி, ஷாப்பிங் மால் காட்சிப்படுத்தப்படும் விதம் ஆகியவை சிறப்பு.
ஜெய்யின் நடிப்பு பின் பாதியில் சோபிக்கும் அளவு முன்பாதியில் கவரவில்லை. எங்கேயும் எப்போதும்வார்ப்பிலிருந்து அவர் விரைவில் வெளியே வர வேண்டும்.
ஆண்ட்ரியா படம் முழுவதும் வருகிறார். கடலை போடுபவர்களைச் சமாளிப்பது, காதலனைச் சீண்டுவது, சவால் விடுவது, வயதில் மூத்த நண்பருடன் இயல்பாகப் பழகுவது ஆகியவற்றை அழகாகக் கையாள்கிறார். யெல்லோமியாபாடலில் வசீகரிக்கிறார்.
அழகம் பெருமாளும் அவரது மனைவியாக வரும் அனுபமாவும் அழுத்தமான நடிப்பை வழங்குகிறார்கள். ஜெய்யின் தோழனாக வரும் பால சரவணன் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பை வரவழைக்கிறார். காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டுக் கருத்து சொல்லும் பாத்திரப் படைப்பு ரசிக்கவைக்கிறது.
பலம் இருக்குங்கிறதுக்காக எதிரியை சம்பாதிக்க கூடாது”, “கைதட்டற ஆடியன்ஸ், கைதட்டு வாங்க நினைக்கலஎன சில வசனங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.
தார்மிக உணர்வுதான் நிஜமான வலிமை என்பதைச் சொல்ல வந்த நோக்கத்தைப் பாராட்டலாம். 



-      -    தி ஹிந்து

Saturday, March 28, 2015

ராமநாதபுரம் மாவட்டத் தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் - அமைச்சர் சுந்தர்ராஜன் திறந்து வைத்தார்.

No comments :
ராமநாதபுரம் மாவட்டத் தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல்களை அமைச்சர் சுந்தர்ராஜன் திறந்து வைத்தார்.

நீர் மோர் பந்தல்

அ.தி.மு.க. பொது செயலா ளர் ஜெயலலிதா கோடை வெயிலின் தாக்கத்தை குறைக் கும் வகையில் நீர்மோர் பந்தல் களை தொடங்கி பொதுமக்க ளுக்கு குளிர்பானங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் முனி யாண்டி ஏற்பாட்டில் திருப்புல் லாணி பஸ் நிறுத்தம் அருகே கோடைகால நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சுந்தர்ரா ஜன் திறந்து வைத்தார். 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தர்மர், அவை தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி, திருப்புல் லாணி யூனி யன் தலைவர் ராஜேசுவரி ஆகியோர் முன்னிலை வகித் தனர். அதன் பின்னர் அமைச் சர் மற்றும் அ.தி.மு.க. நிர்வா கிகள் பொதுமக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினர். 

பரமக்குடி

பரமக்குடி கூட்டுறவு பால் பண்ணை அருகில் நகர் அ.தி. மு.க. சார்பில் நகர் செயலா ளர் கணேசன் ஏற்பாட்டிலும், ஆர்ச் அருகில் மாவட்ட சிறு பான்மை பிரிவு பொருளா ளர் அப்துல் மாலிக் ஏற்பாட் டிலும் நீர்மோர் பந்தல் திறக் கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச் சிக்கு அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

நயினார்கோவில்

இதேபோல பார்த்திபனூ ரில் ஒன்றிய செயலாளர் முத் தையா ஏற்பாட்டில் அமைக் கப்பட்டுள்ள நீர் மோர் பந் தலை அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். 

இதில் மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, ஊராட்சி தலைவர் ரேணுகா தேவி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல நயினார் கோவிலில் ஒன்றிய செயலா ளர் குப்புச்சாமி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.

செய்தி: தந்தி


வண்ணாங்குண்டு கிராமம்: “மூன் நர்ஸரி பள்ளி” 12ம் ஆண்டு விழா

No comments :
வண்ணாங்குண்டு கிராமம்: “மூன் நர்ஸரி பள்ளி” 12ம் ஆண்டு விழா அழைப்பிதழ்:







 அழைப்பாளர்: திரு.அஸ்கர் அலி, நிறுவனர் மூன் நர்சரி










துபாய் HONEYWELL நிறுவனத்தில் SERVICE COORDINATOR வேலை வாய்ப்பு

No comments :
Service Coordinator
Honeywell - Dubai
Position Overview:

Honeywell Scanning & Mobility is the Global Leader in the design and manufacture of image and laser based data collection solutions. You will provide primary technical support and training to Honeywell Authorized Service Partners (ASP’s) in the Middle East region.

Responsibilities: 
  • Develop training material and hardware kits to train ASP’s on new products. Provide training to ASP’s on running products as required
  • Keep repair product knowledge up-to-date and provide (remote) technical support for the full product range
  • Inform and train ASP’s on implementation of Engineering Changes
  • Monitor ASP repair performance on material consumption and repair quality, report back to EMEA Repair Centers Manager
  • Key interface between ASP’s and HSM for any escalations
  • Qualify partners that aspire to become ASP
  • Create forecast for ASP inventory (based on install base, age of product, historical failure rate etc.)
  • Based in Dubai office but significant travel required throughout the GCC

Qualifications
Qualifications & Experience: 
  • Basic degree in Engineering or Computer Science
  • 3-5 years hands-on repair experience of handheld / mobile terminals, scanning devices and barcode printers
  • Experience with Android and Windows OS
  • Analytical abilities
  • Good communication / presentation skills
  • Accurate and precise in all aspects of daily work
  • Experience with running a repair center operation in the AIDC industry is a plus
Click here to learn more about Honeywell’s Automation & Control Solutions business.

Wonder what it’s like to work at Honeywell? Check out our One Honeywell Culture video on the Honeywell YouTube Channel.

Is this job not an exact match to what you were looking for? Join Honeywell's Talent Network to receive updates on other Honeywell employment opportunities, news and more. For more information, please visit our career site .

Job : Customer/Product Support
Primary Location : ARE-Dubai

Education Level : Bachelor's Degree
Shift : Day Job
Travel : Yes, 50 % of the Time
Relocation Available : No
SBG : ACS
University Relations Requisition : No

TO APPLY: CLICK HERE

Friday, March 27, 2015

கீழக்கரையில் HDFC வங்கியின் புதிய கிளை!!

No comments :
கீழக்கரை தபால் அலுவலகம் ரோடு (POST OFFICE ROAD) கிழக்கு தெரு செல்லும் பாதையில்,இன்று H.D.F.C வங்கி திறக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியை கட்டிடத்தின் உரிமையாளர்,ஜனாப்.அலாவுதீன் (டங் டங்) அவர்களால் திறந்து வைக்கபட்டது,சிறப்பு விருந்தினராக மதுரை H.D.F.C வங்கியின் துணை தலைவர் திரு.C.V.ஹரிகலந்து கொண்டார்.

இது குறித்து  அந்த வங்கியின் மேலாளர் திரு நடராஜ் குமார் அவர்கள் கூறும் போது எங்களது வங்கி இந்தியாவில் 6000 க்கு  மேலாக உள்ளது தற்போது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கீழக்கரையில் திறக்கப்பட்டுள்ளது . 
இதில் விவாசாயகடன்,நகைகடன், இருசக்கர வாகன கடன் ,புதிய வீட்டுகடன்,இதுமட்டுமல்லாது நகரத்தில் என்னென்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல கீழக்கரை கிளைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 
மேலும் விபரங்களுக்கு கிளை மேலாளர் நடராஜ் குமார்.தொலைபேசி என்:98941 423 57.

செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

கத்தாரில் கீழக்கரை மக்களின் சமூக நல கூட்டம் (படங்கள்)!!

No comments :
SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீது அவர்களின் கத்தார் வருகையையை முன்னிட்டு, அவரின் சொந்த ஊர் கீழக்கரையைச்சார்ந்த மக்களுடன் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இன்று ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கியதோடு, சில அரசியல் சந்தேகங்களை கேள்வி - பதில் மூலம் நிவர்த்தி செய்து கொண்டனர்.

கலந்தாய்வு படங்களிள் சில உங்கள் பார்வைக்கு:




படங்கள்; திரு. கீழை ஹசன் அன்சாரி, கத்தார்


Thursday, March 26, 2015

துபாய்-மதுரை மற்றும் துபாய்-திருச்சி விமான நேரங்களில் மாற்றம்!!

No comments :
தினசரி சேவையாக துபாய் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் SG24 எண் விமானம் வரும் மார்ச் 29ம் தேதி முதல் காலை 11:00 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மாலை 16:40 மணிக்கு மதுரை சென்றடையும்.
 
பின்னர் இரவு 19:10 மணிக்கு SG23 விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 22:05 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதே போல்,
கோடைகாலத்தையொட்டி பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் துபாய் - திருச்சி விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வரும் மார்ச் 29ம் தேதி முதல் மாலை 18:25 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 00:05 மணிக்கு திருச்சி சென்றடையும் பின்னர் நள்ளிரவு 00:55 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:45 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Wednesday, March 25, 2015

கீழக்கரையில் வாகன விபத்து. ஒருவர் படுகாயம்!!

No comments :
கீழக்கரை அருகே முனிஸ்வரன் கோவில் சாலையின் வளைவில் கீழக்கரையிருந்து ராமநாதபுரம் சென்ற இருசக்கர வாகனமும் அதேபோலே  ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி வந்த மற்றொரு பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாகனத்தில் வந்தவர்கள் காயமடைந்தனர் இதில் ஒருவரை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரும் பலத்த காயமடைந்ததால் ராமநாதபுரம் அரசுமருத்துவமனைக்கும் சேர்க்கப்பட்டனர்.


கீழக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த மூவரும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது .வடக்குதெருவை சேர்ந்த ஜலால் மற்றொருவர்  கிழக்குதெரு அப்சர் , கிழக்குதெரு பட்டனி அப்பா பகுதியை சேர்ந்த மீராசாகிபு  எனத் தெரிந்தது.மீராசாகிபு என்பவர் பலத்த காயமடைந்ததால் மதுரை கொண்டு சென்றுள்ளனர்.


செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

கீழக்கரை நகராட்சி ஆணையாளரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை!!

No comments :
கீழக்கரை நகராட்சி ஆணையாளரை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, கீழக்கரை 20ம் வார்டு கவுன்சிலர் திரு. ஹாஜா நஜீமுதீன் அவர்கள் தலைமை செயலகத்தில் அளித்த மனு உங்கள் பார்வைக்கு:


Fly Dubai விமான நிறுவனத்தில் Airport Baggage Coordinator வேலை வாய்ப்பு

No comments :
Airport Baggage Coordinator
Fly Dubai - Dubai
Airport Baggage Coordinator conducts intensive secondary tracing investigation in order to locate short shipped baggage in the shortest possible time and minimise customer inconvenience. Once located the BTA verifies the identity of baggage & passenger and arranges repatriation with the customer.

KEY ACCOUNTABILITIES 

Key Activities

1. Retrieve all open AHL’s from day 6 from the world tracer system and conduct secondary tracing.

2. Ensure all left behind bags forwarded on the first available flight.

3. Request complete documents and baggage details from Passengers to conduct intensive tracing i.e. (Contents/copies of tags/ticket receipts/PIR copy).

4. Retrieve loading details from outstation.

5. Investigate all possible matches found.

6. Request all identified on hand matches & follow up till bag arrives.

7. Update daily database.

8. Check AHL/OHD quality and raise discrepancy for any inconsistency noticed in creation of the file.

9. Keep the Passenger informed to ensure proper handling.

10. Forward the file with complete documents for final settlement if baggage considered lost and not located for 21 days.

11. Monitor and ensure all records/databases are updated accurately.

Qualifications: 

MINIMUM QUALIFICATIONS / EXPERIENCE/ KNOWLEDGE / SKILLS 

Experience

• 3+ years’ experience in baggage tracing.

• 3+ years customer services experience

Knowledge / Skills

• Excellent understanding of World Tracer System

• Fluent in English ( Written & Spoken )

• Knowledge of Excel, Word and Power point

CORE COMPETENCIES 

• Customer Focus

• Team work

• Effective Communication

• Personal Accountability & Commitment to achieve

• Resilience and Flexibility (Can do attitude)

TO APPLY :CLICK HERE

துபாய் ZS MEP நிறுவனத்தில் DOCUMENT CONTROLLER வேலை வாய்ப்பு

No comments :
MEP Contracting Company requires the following personnel 
Document Controller 2 Nos (Dubai & Abudhabi): The position demands the person to undertake overall in-charge of documentation and document control policies and procedures of Project. Generate any project-specific reports as required by the Project Manager. Prepare progress reports for Inspection Requests, Material Inspection Requests, Non Conformance Reports, Quality Observation Reports & Site Instructions and weekly and monthly basis for meetings.Updating the tracking log of drawing flow sheet as and when the approved drawings are received from the main contractor.Update the tracking log of the Technical Submittals. All records must be legible, dated, identifiable and traceable to the activities involved. They must be stored and maintained in such a way that they are readily retrievable and protected against damage, deterioration or loss.Records must also be kept in electronic format. Data integrity and security including back-up data, must be ensured.Provide feedback and assist the Project Manager in the preparation of weekly/monthly reports. . Candidates with prior experience as a Document Controller will be preferred. 

Attractive salary will be provided to the right candidates. 

Please rush in your CV’s & expected salaries to hr.zsmep@gmail.com

Requirements Experience with ACONEX is a must. 


காஞ்சிரங்குடி வாலிபருக்கு நவீன முறையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை!! இராமநாதபுர அரசு மறுத்துவர்கள் சாதனை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞருக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தை சேர்ந்த மௌலானா மகன் சியாபுதீன்(19). இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில், வலது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு வலியுடன் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவரது வலது கால் மூன்றரை அங்குலம் உயரம் குறைவாகவும் இருந்தது. அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வந்தார். ஏழ்மை நிலையில்லான இவரது குடும்பச் சூழ்நிலையில், உரிய மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு மருத்துவக் குழுவினர் மூலம் நீண்ட நாள் உழைக்கக் கூடிய செராமிக் வகையான பந்து மற்றும் கிண்ணம் சிமெண்ட் இல்லாத முறையில் அறுவைச்சிகிசிசை மூலம் இடுப்பு மூட்டு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வகையான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.4லட்சம் வரை செலவாகும். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.20லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டு, சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. சியாபுதீன் தற்போது நன்கு குணமடைந்து நடக்கும் நிலையில் உள்ளார். அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை நிலைய மருத்துவர் சகாயஸ்டீபன்ராஜ், எலும்பு முறிவு மருத்துவர் பெரோஸ்கான் ஆகியோரை ஆட்சியரும்,இளைஞரின் குடும்பத்தினரும்,உறவினர்களும் பாராட்டியுள்ளனர்.

இது போன்ற பல்வேறு சிகிச்சைகளும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருவதாகவும்,பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மருத்துவத்துறை இணை இயக்குநர் ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


செய்தி: தினமணி