(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 7, 2015

துபாயில் முப்பெரும் விழா

No comments :
துபாயில் இயங்கிவரும்  ஏகத்துவ மெய்ஞானச் சபையினரால் “லேண்ட்மார்க் ஹோட்டலில்” நடத்தப்பட்ட மீலாது விழா, புத்தக வெளியீட்டு விழா நேற்றிரவு மஃரிபுக்குப் பின்னர்த் துவங்கி இரவு 10:30 மணியளவில் இனிதே நிறைவேறியது.

விழாவின் தலைவராக, கலீஃபா A P சஹாப்தீன் (தலைவர் ஏகத்துவ மெய்ஞானச் சபை, துபை)அவர்கள் மிகச் சிறப்பாக உரைகளும், தொகுப்புரைகளும் வழங்கிச் சிந்திக்கத் தூண்டும் ஞான விளக்கமளித்தார்கள்.

pg5

சிறப்புப் பேச்சாளராக,  காயல்பட்டினம் ஹழ்ரத் ஹுஸைன் மக்கி ஆலிம் அவர்கள் ஓர் உருக்கமான பேருரை நிகழ்த்தினார்கள். “பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை” என்னும் தலைப்பில் அதிரை ஷர்புத்தீன் அவர்கள் தொகுத்த நூலை வெளியிட்டு அதன் சில பகுதிகளை ஆய்வுரை செய்து சொற்பொழிவாற்றினார்கள்.

சகோதரர், கே எம் ஏ ஷாஹுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.  சகோதரர்கள் செய்யது அலி மௌலானா , முஹம்மது அலி (பிலாலி) ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நபி(ஸல்)புகழ்ப் பாடல் (உருது மொழியில்) சகோதரர் முஹம்மத் ரஸா (காதிரி (பீஜப்பூர்), மற்றும் தமிழ் மொழியில் சகோதரர்கள் மதுக்கூர் முஹம்மத் தாவூத் மற்றும் ஹாஜா முஹிய்யத்தீன் ஆகியோர் பாடினார்கள்.

நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றிக் கவிதையை அதிரை,” கவியன்பன்” கலாம் அவர்கள் இந்த விழாவில் வாசித்தளித்தார்கள்.

அதிரை அப்துற்றஹ்மான் அவர்கள் சிறப்பான முறையில் “வீடியோ” பதிவுகள் எடுத்தார்கள்; உலகம் முழுவதும் உள்ள ஆஷிகீன்கள் காணும் வண்ணம் இணையத் தளத்தில் நேரலையும் பதிவு செய்யப்பட்டது.
அதிரை ஷர்புத்தீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

செய்தி; திரு. கலாம், அபுதாபி



No comments :

Post a Comment