Saturday, February 28, 2015
தொண்டி அல் ஹிலாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழா
தொண்டி அல் ஹிலாள் மெட்ரிக் மேல் நிலைப்
பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர்
கமால்பாட்ஷா தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர்
மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி, மதுரை சாராசென்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர்
முகம்மது பைரோஸ், அல் ஜின்னா
இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் ஜபார் நைனா முகம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தொண்டி பேரூராட்சி தலைவர் சேகுநைனா,
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்
நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பியாட்றல் அன்னா ஜாய் ஆகியோர் விûளாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கிப் பேசினர்.
பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
No comments :
Post a Comment