Monday, February 23, 2015
தொண்டி தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு
தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற
கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.
இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார்.
மாநிலச்செயலாளர் கோவை செய்யது பேசினார். தொண்டியில் பொது மக்களுக்கு இடையூராக
உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றுவது, தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்
நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
இதில் தொண்டி பேரூர் கிளைச் செயலாளராக கலந்தர் ஆசிக், பொருளாளராக அப்துல் ரஹிம், நெய்னார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை பரகத் அலி, சகுபர் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். மமக ஒன்றியச் செயலாளர் சாகுல்ஹமீது, அக்பர் சுல்தான், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் ஆசிக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மௌலவி பைஜீர் ரஹ்மான் நன்றி கூறினார்.
செய்தி: தமுமுக
No comments :
Post a Comment