Sunday, February 8, 2015
தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மின் விளக்குகள் அமைக்க கோடிக்கை.
தொண்டி செய்யது முகம்மது அரசினர்
மேல்நிலைப்பள்ளியில் மின் விளக்கு இல்லாததால் திருட்டு சம்பவம் நடைபெற வாய்ப்பு
உள்ளதால் பள்ளி மைதானத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து
வருகின்றனர். இங்கு கணினி அறை, பரிசோதனை அறை (லேப்) உள்ளிட்ட பல அறைகள்
உள்ளன.
இங்கு மின்சார வசதி இருப்பினும் பள்ளி முடிந்து இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இருட்டாக உள்ளது. இது திருட்டு சம்பவத்திற்க்கு வழிவகுக்கும் என்பதால் இப்பள்ளி மைதானத்தில் விளக்குகள் அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments :
Post a Comment