Tuesday, February 17, 2015
மாநில அளவிலான கபடி போட்டியில் ராமநாதபுர அணி வெற்றி.
கமுதி அருகே கோட்டைமேட்டில் அதிமுக
சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை,
தேனி, சிவகங்கை, திண்டுக்கல்
மாவட்டங்களில் இருந்து 57 அணிகள் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்ட
அதிமுக செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர்
சுந்தரபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டைமேடு கிளை செயலாளர் நாடக நடிகர் வில்வ
இளங்கோவன் வரவேற்றார். சுபாஷ் நகர் கிளை செயலாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.
(கோப்பு படம்)
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒட்டுமொத்த பரிசுகளையும் ராமநாதபுரம் மாவட்ட அணிகள் தட்டி சென்றன. முதலாவது இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை அணியும், இரண்டாவது கோட்டைமேடு அணியும், மூன்றாவது இடத்தை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி அணியும், நான்காவது இடத்தை கடலாடி அருகே உள்ள சொக்கானை அணிகளும் பெற்றன. இந்த அணிகளுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

No comments :
Post a Comment