Wednesday, February 18, 2015
சவூதியில் இறந்த கணவர் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டி ஆட்சியரிடம் மனு
சாயல்குடி அருகேயுள்ள
சண்முககுமாரபுரத்தைச் சேர்ந்தவர் செந்தூர் (41). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்
கூலித் வேலை செய்ய சவுதி அரேபியாவுக்கு
சென்றிருந்தாராம். அங்கு கடந்த 26.3.2014 அன்று கார் விபத்தில் உயிரிழந்து விட்டாராம்.
அவரது சடலம் சவுதி அரேபியாவிலேயே இருப்பதாக தெரியவந்ததை
அடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி செ. மரியாள் மற்றும் இவரது மாமனார் செல்லப்பெருமாள்
ஆகியோர் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து
கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும்
அம்மனுவில் கணவர் இறந்து ஓராண்டாகியும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியவில்லை.
கணவரின் சடலம் குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை. மேலும்
தனக்கு இரு மகள்கள் இருப்பதாலும், வறுமையில் வாடுவதாலும் என் கணவர் பணியாற்றிய அயல்நாட்டு நிறுவனத்திடமிருந்து எனக்குச்
சேர வேண்டிய பணப் பலன்களை பெற்றுத் தருமாறும் அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் செ.
மரியாள் தெரிவித்தார்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment