(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 26, 2015

தொண்டியில் சிலிண்டர் வெடித்து முகம்மது ஹக் என்பவர் படுகாயம்

No comments :
தொண்டியில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்ததில், ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தொண்டி கிழக்குத் தெருவில் வல்கனைசிங் கடை வைத்திருப்பவர் முகம்மது ஹக்(25). இவர், செவ்வாய்க்கிழமை தனது கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கம்பிரஷருக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் திடீரென வெடித்ததில், முகம்மது ஹக் பலத்த காயமடைந்தார். மேலும், கடை முற்றிலும் சேதமடைந்தது.

தகவலறிந்த தொண்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, முகம்மது ஹக்கை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: முகநூல் வழி தொண்டி நண்பர்கள்

No comments :

Post a Comment