Tuesday, February 24, 2015
துபாய் சாலையில் பண மழை - ஓடி ஓடி அள்ளிய மக்கள்
துபாய் சாலையில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் ஓடியோடி எடுத்தனர்.துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் கடந்த 11ம் தேதி சூறாவளிக் காற்று வீசியது. அப்போது திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர்.
வாகன ஓட்டிகள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை. சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விரட்டினர். இது பற்றி விசாரனை நடந்து வருகிறது
காணொளி காண: இங்கு க்ளிக் செய்யவும்
No comments :
Post a Comment