(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 12, 2015

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தகவல் சரிபார்ப்பு முகாம்

No comments :
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பதிவை இணைய தளம் மூலமாகவோ அல்லது நேரிலோ சரிபார்த்துக் கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய அவரது செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை பதிவு செய்திருப்பவர்கள் இணையதளத்தில் தங்களுடைய பதிவு அடையாள அட்டையை அச்சுப்பிரதி எடுத்து அதில் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பயிற்று மொழி, முன்னுரிமைப் பதிவு விவரம் மற்றும் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ததற்கான பதிவு மூப்பு ஆகிய விவரங்களை சரிபாரித்துக் கொள்ளவும்.

அதில் ஏதேனும் விடுபாடுகளோ, திருத்தங்களோ இருந்தால் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், முன்னுரிமைப் பதிவு சான்றிதழ் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் நகல் ஆகியவற்றுடன் தாங்களோ அல்லது தங்களது உறவினர்களோ வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்துசரி செய்து கொள்ளலாம்.


போதுமான விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே சரியாக பதிவு செய்திருந்தாலோ அல்லது பதிவு விவரங்கள் சரியாக இருந்தாலோ வர வேண்டிய தேவையில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments :

Post a Comment