Saturday, February 21, 2015
ராமேசுவரம் ரயிலில் கொள்ளை
பயணிகள் கவனத்திற்கு!!!!
தேவகோட்டை அருகே எழுவன்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா(70). இவர் தேவகோட்டை
ரஸ்தாவில் ரயில் வந்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். சகபயணிகள் கொடுத்த தகவலின்
பேரில் ரயில்வே போலீசார் கருப்பையாவை தேவகோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுமார் பத்து மணி நேரத்திற்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. பின்னர் அவரிடம்
போலீஸார் விசாரணை நடத்தினர்.
இருவரும் சகஜமாக
பேசிக்கொண்டு வந்தோம். விழுப்புரம் உட்பட இரண்டு ஊர்களில் அவருடன் சேர்ந்து தேநீர்
குடித்தேன். தஞ்சாவூரில் அந்த நபர் எனக்கு தேநீர் வாங்கி கொடுத்தார்.
சிறிது நேரத்தில்
தான் மயங்கிவிட்டேன், என்றார். தற்போது மோதிரங்கள் ,சூட்கேசில் இருந்த பொருட்கள் உட்பட
50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை என்றார். இது குறித்து ரயில்வே போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
செய்தி மூலம்; தினசரி நாளிதழ்கள்
No comments :
Post a Comment