Thursday, February 26, 2015
கீழக்கரையில், திருமணமான நான்கே நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
கீழக்கரையில், திருமணமான
நான்கே நாளில் புதன்கிழமை காலை புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கீழக்கரை அண்ணா நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் கலையரசி (21). இவருக்கும், சாயல்குடி அருகே உள்ள எஸ்.வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பழனி முத்துபாக்கியம் என்பவருக்கும், கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதிகள் இருவரும் மறுவீட்டுக்கு
எஸ்.வாகைகுளம் சென்றுவிட்டு, மறுபடியும் கீழக்கரை
திரும்பியுள்ளனர். புதன்கிழமை காலை, பழனிமுத்துபாக்கியம்
மீண்டும் வாகைகுளம் செல்லவேண்டும் எனக் கூறினாராம். அதன்படி, இருவரும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டுக்குள் சென்ற கலையரசி, திடீரென தனது உடலில்
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
படுகாயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரின் தாயார் விஜயலெட்சுமி, கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன்
வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான நான்கே நாளில் புதுப்பெண்
தற்கொலை செய்துகொண்டதால்,
ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம் பிரதீபன் விசாரணை
நடத்தி வருகிறார்.
செய்தி: தினமணி
செய்தி: தினமணி
No comments :
Post a Comment