(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 28, 2015

மீண்டும் முதல்வராக வேண்டுமென்ற ஆசை இல்லை - மு.க

No comments :
திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள், இளைஞர் எழிச்சி நாளாக சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "இங்கே வழங்கப்பட்டுள்ள 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முழுமையாக ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் இருக்க வேண்டுமென்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.  இப்பொருட்களை பெறுகின்ற மக்களின் வாழ்த்துக்கள் தம்பி ஸ்டாலின் வயதை இன்னும் 10, 20 வருடங்களுக்கு கூடுதலாக்கும் என்று நம்புகிறேன். 


இங்கு பேசியவர்கள் நான் மீண்டும் 6வது முறையாக முதல்வராக வர வேண்டுமென சொன்னார்கள். எனக்கு மீண்டும் முதல்வராக வேண்டுமென்ற ஆசை இல்லை. திமுகவை கட்டி காக்க வேண்டும். கடைசி தொண்டன் இருக்கும் வரை இக்கழகத்தி எதிரிகளுக்கு விட்டு கொடுக்க முடியாது. வாடி வதங்கி இருக்கும் ஏழை, எளிய தொண்டர்களுக்கு இந்த கழகத்தை விட்டால் வேறு வழியில்லை என்பதனை உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இவ்விழாவில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவித் திட்டங்கள் 20 ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment