Thursday, February 5, 2015
இசை - தமிழ்
தன்னோட வெற்றியை தக்க வச்சுக்க தன்னையே
இழக்கவும் தயாரா இருக்கான் மனுஷன் என்ற ஒருவரியை மையமாகக் கொண்ட இசை திரைப்படம்.
இளையராஜா இப்படி மையக்கருவுடன் ஒரு படம் வருவதையே விரும்பவில்லை. ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைக்க மறுத்துவிட்டார். பிரகாஷ் ராஜ் கதை கேட்டுவிட்டு நடிக்க மறுத்து
ஒதுங்கிக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் படம்.தமிழகத்தின்
இருபெரும் இசையமைப்பாளர்கள் பற்றிய கதை. அல்டிமேட் மியூசிக் த்ரிலலர் என்றெல்லாம்
பெரிய பில்டப்களுடன் சேர்ந்திசைத்து ஒலித்திருக்கிறது இந்த இசை. கதை,திரைக்கதை, இயக்கத்துடன்
இசையும் எஸ்.ஜே.சூர்யா தான்.நடித்து தொலைத்திருப்பதை மட்டும்
தவிர்த்திருக்கலாம்.அஜீத்,விஜயை வைத்து கொடுத்த ஹிட்ஸ் நினைவுக்கு
வருவதால்.
மியூசிக் த்ரில்லர் படங்கள் தமிழில்
புதிதில்லை என்றாலும் இசை கதைக்களன் கொஞ்சம் மாறுபட்டது. எஸ்.ஜே.சூர்யாவின் படம்
என்றால் அனுமானிக்கக் கூடிய கொஞ்சம் சதை+ கொஞ்சம் கதை பாணிதான் என்றாலும் மூன்று
மணிநேர பத்து நிமிஷ படம் என்பது பெரும் வாதை .. பெரும் பாரத்தை சத்யராஜின்
வில்லத்தனம் சுமந்து பயணிப்பது 'இசை'யின் பலம். லொள்ளுத்தனங்கள் இல்லாத வில்லத்தன
சத்யராஜ் அசத்தியிருக்கிறார். நாயகி சாவித்ரி என அறிமுகம் போடுகிறார்கள்.ஒரிசாவில்
டிவி சீரியலில் நடித்தவராம்.எஸ்.ஜே. சூர்யா படத்தில் நடிப்பதற்கான அத்தனை
தகுதிகளையும் 'குறைவற'ப் பெற்றிருக்கிறார். சத்யராஜ் காட்சிகள்
தவிர்த்த முதல் ஒரு மணிநேர படத்தை ஈவிரமிக்கமின்றி ஃபார்வேர்டு செய்துவிட்டு
பார்த்தால் இசை இதம் தான். மருத்துவமனையில் நாயகியிடம் சூர்யா பேசும் ஒரு ஐந்து
நிமிட வசனம் அதற்கு முன் காட்டப்பட்ட அத்தனை ஜில்பான்ஸ் காட்சிகளையும்
துடைத்தெறிந்து விடுகிறது. கஞ்சா கருப்பு , தம்பி ராமையா யாவரும் அடக்கி வாசித்து ரசிக்க
வைத்திருக்கிறார்கள். லொகேஷன்கள் , பாடல்கள் ,படத்தின் இரண்டாம் பகுதி ஆஹா ரகம்
என்றாலும்.......
கிளைமாக்ஸ்க்குப் பின்னதான ஒரு ட்விஸ்ட் -
அதை ரசிக்க முடிந்தால் சந்தேகமின்றி இது ஒரு வெற்றிப் படம்.
கொஞ்சம் ம்,சை ! கொஞ்சம் இம்சை , கொஞ்சம் இசை
!
விமர்ச்கர்:
திரு.ஷேக் ஷாஜஹான், சவூதி அரேபியா
No comments :
Post a Comment