Tuesday, February 10, 2015
ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் காப்பிய விழா
ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில்
கனகமணி வாகன வளாகத்தில் காப்பிய விழா ஞாயிற்றுக்கிழமை ஆயுள் காப்பீட்டுக் கழக
முகவர் சங்கத் தலைவர் க. சுப்பையா தலைமையில் நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் மை.
அப்துல்சலாம், துணைத்
தலைவர்கள் குழ. விவேகானந்தன், வைகிங் எம்.எஸ். கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் கா. மங்களசுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் புலவர் மணிமேகலை சோமசுந்தரம்
(மணிமேகலை மாண்பு), பி. குமரன் (சீறடிச்சிலம்பு), புலவர். பழ. முருகேசன் (நற்றினையில் நற்றமிழர் பண்பாடு),
கவிஞர் மானுடப்பிரியன் (பூங்குன்றனாரின்
பொன்வரிகள்), மு. அப்துல்
மாலிக் (சிந்தாமணியின் சீர்மைகள்), புலவர் சு.தி. சங்கரநாராயணன் (வளையாபதி குண்டலகேசியின்
வனப்புகள்), மூத்த
வழக்குரைஞர் மு. ராமசாமி (வள்ளுவரின் வாழ்வியல் நெறி)உள்ளிட்ட தமிழறிஞர்கள்
பல்வேறு காப்பியத் தலைப்புகளில் பேசினர்.
நிறைவாக சங்கச் செயலரும் கண்
மருத்துவருமான பொ. சந்திரசேகரன் நன்றி கூறினார்.
நன்றி: தினமணி
No comments :
Post a Comment