Monday, February 16, 2015
பெட்ரோல் , டீஸல் விலை உயர்வு
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை சரியாக ஒரு மாதம் கழித்து நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்புக்கு இணங்க இந்த விலை உயர்வினை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ளூர் வரி விதிப்புகளுக்கு ஏற்ப பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசா அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 58.88ல் இருந்து ரூபாய் 59.85 ஆகியுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 67 பைசா அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 48.91ல் இருந்து ரூபாய் 49.58 ஆகியுள்ளது கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும் . கடைசியாக கடந்த ஜனவரி 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.42ம், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.25ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில் விலை குறைப்பு அமல் படுத்தப்பட்ட ஒரு மாத காலகட்டத்திற்குள் மீண்டும் விலை உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து இந்திய எண்ணெய் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த முறையை விட சற்றே சரிந்துள்ளது. இவ்விரு விளைவுகளின் காரணமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையை உயர்த்த வேண்டியதாயிற்று. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் விலை நிலவரமும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவற்றில் ஏற்படக்கூடிய போக்கை வைத்து, எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment