Saturday, February 7, 2015
தேவிபட்டினத்தில் தீ விபத்து
தேவிபட்டினம் காந்திநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாக்கியராஜ்(வயது 38). இவ ரது குடிசை வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமி தீ வைத்து விட்டதாக கூறப் படுகிறது.இதில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாச மானது. மேலும் வீட்டில் இருந்த ரூ.5,000 ரொக்கம், 2 பவுன் தங்க தோடு, வெள்ளி கொலுசு, சைக்கிள், மோட்டார் சைக் கிள் மற்றும் ஆவணங்கள் தீக் கிரையானது. இதன் மதிப்பு சுமார் ரூ.25,000 என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோபு வழக்கு பதிந்து விசா ரித்து வருகிறார்.
No comments :
Post a Comment