Friday, February 27, 2015
காக்கி சட்டை - தமிழ்
தொலைக்காட்சியில்
முகம் காட்டிய நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனங்களில் இடம்
பிடித்து, தனக்கான ரசிகர் வட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
சிவகார்த்திகேயன், முதன்முதலாக காக்கி சட்டை அணிந்து போலீஸ் வேடம் ஏற்று
நடிக்கிறார் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் மிகப் பெரிய
எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து
நிறைவளிக்கிறது ‘காக்கி சட்டை’.
படத்தில்
அதிரடி ஆக்சன் இருந்தாலும், தனது வழக்கமான காமெடியிலும் கலக்கி இருக்கிறார்
சிவகார்த்திகேயன்.
மதிமாறன்
என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், படத்தில் ஆரம்பத்தில்
அமைதியான போலீசாக வந்து காமெடி பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையில்
ஏற்படும் திருப்பத்தால் தான் யார் என்பதை நிரூபிக்கும்விதமாக சீரியசாக களமிறங்கி
அதிரடி ஆக்சனில் தூள் கிளப்புகிறார்.
மனித
உடலுறுப்புகளை வியாபாரப் பொருளாக பாவித்து விற்பனை செய்யும் கொடூர குற்றத்தை
கண்டுபிடித்து, அதை முழுமையாக சிவகார்த்திகேயன் எப்படி அழிக்கிறார் என்பது
படத்தின் அடிப்படை கதை. இதில் இடையிடையே ரசிக்கும்படியாக ஸ்ரீதிவ்யாவுடன் ரொமான்ஸ்
செய்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு
போலீஸ் வேடம் நன்றாக பொருந்தியுள்ளது. காமெடியிலும், ஆக்சனிலும்
அசத்தியிருக்கிறார்.
ஒரு
முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் பிரபு மனதில் நிற்கிறார். நாயகி ஸ்ரீதிவ்யா
படம் முழுவதும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.
இம்மான்
அண்ணாச்சியின் ஒன்லைனர் காமெடி ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரின் வழக்கமான காமெடி
மிஸ்ஸிங்.
படத்தில்
மழையில் வரும் சண்டைக் காட்சி பிரமிக்க வைக்கிறது. அஜித், விஜய், ரஜினி போன்ற
உச்சநட்சத்திரங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஆங்காங்கே வசனங்கள் வைத்து கைதட்டல்
வாங்குகிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். ‘எதிர்நீச்சல்’ படத்தைப் போலவே இந்த
படத்திலும் அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமான காட்சிகளை அவர் அமைத்திருப்பது
பாராட்டுக்கு உரியது.
சுகுமாரின்
ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது; வண்ணங்களை அள்ளித் தருகிறது. அனிருத்தின்
இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே செம ஹிட். பின்னணி இசையிலும்
அசத்தியிருக்கிறார்.
முதல்
பாதி காமெடியாகவும், இரண்டாவது பாதி சீரியசாகவும் செல்வதால், சிவகார்த்திகேயனின்
ஏனைய படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கிறது.
‘காக்கி
சட்டை’– ஜெயிக்கும் சட்டை!
No comments :
Post a Comment