(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 25, 2015

நாடாளமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதா தாக்கல், அப்படி என்றால் என்ன?

No comments :
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்கட்சியினர் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மிகட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

லோக்சபாவில் மசோதாவை அறிமுகம் செய்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரேந்திர சிங், "லோக்சபா உறுப்பினர்களின் எதிர்ப்பை கவனித்தில் கொள்கிறேன். மசோதா மீது விவாதம் நடக்கும் போது விரிவாக ஆலோசிக்கலாம்" என்றார். நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்த விவகாரத்தை ராஜ்யசபாவில் இன்று கையிலெடுத்த எதிர்கட்சிகள், அந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது.

நிலம் கையகப்படுத்தும் மசோதா என்றால் என்ன?


உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் திட்டங்களில் பல நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் நின்று போய்விடுகின்றன. இதை தவிர்க்க 117 ஆண்டுகளுக்கு முந்தைய நில கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறது மத்திய அரசு. இந்த மசோதாவுக்கு நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்-2012' என்ள பெயரிடப்படுள்ளது. நிலம் கையகப்படுத்தல் சட்டம்-1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்? 

இந்த மசோதா நிறைவேறினால் தனியார் நிலத்தை, அரசு கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதியில் நிலத்தின் மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்பகுதியில் 2 மடங்கும் இழப்பீடு கிடைக்கும். 66% பேர் ஒப்புதல் இருந்தால்தான் நிலத்தை எடுக்க முடியும் நிலம் தருவோரில் 66% பேரின் ஒப்புதல் இருந்தால்தான் அவற்றை கையகப்படுத்த முடியும்.

விளைநிலைத்துக்கு தடை


இம்மசோதா நிறைவேறினால் நீர்ப்பாசனம் மிக்க பயிர் சாகுபடி செய்யும் நிலம் மற்றும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்காது.

No comments :

Post a Comment