Sunday, February 22, 2015
கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கலாம்
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மையம் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார்
விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் என 18 மையங்களில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர்
முதல் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப ராமநாதபுரம் கலெக்டர்
அலுவலக வளாக, தரைத்தளத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம்
எடுக்கும் பணி கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆதார்
அட்டைக்கு புகைப்படம் எடுக்காதவர்கள் இம்மையத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ள
வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment