Monday, February 9, 2015
துபாய் - ல் மாபெரும் பொங்கல் விழா
துபாய்: தினத்தந்தி மற்றும் ரேடியோ சலாம் 106.5 எப்.எம். இணைந்து துபாயில் நடத்திய பொங்கல் விழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. துபாய் & அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள மர்மம் பால்பண்ணையில் மதியம் 12 மணி முதல் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்த விழாவினையட்டி கோலப் போட்டி, உரி அடித்தல் பொங்கல் சமைத்தல் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிகழ்ச்சிகளை ரேடியோ சலாம் 106.5 எம்.எம். குழுவின் ரேவா, நிவி, அன்னி, உத்ரா, அருண்குமார் உள்ளிட்ட குழுவினர் தொகுத்து வழங்கினர்.
பிரபல பின்னணி பாடகர் நிகில் மேத்யூ பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பாடல் ஆசிரியை ரேணுகா சர்மாவின் மாணவ, மாணவியர்களது கலை நிகழ்ச்சிகள் விப்ஜியார் ஈவெண்ட்ஸ் மூலம் நடைபெற்றன. பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நன்றி: ஒன் இந்தியா.
No comments :
Post a Comment