(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 11, 2015

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ALUMNI விழா

No comments :
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மதுரை கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மதுரை கூட்டமைப்பு துவக்க விழா மதுரை சங்கம் ஹோட்டலில் நடந்தது. கல்லூரி முதல்வர் முகம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பல துறைகளில் சிறந்து விளங்குகின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கு மிக சிறந்த சந்தர்ப்பமாக அமைகிறது. அவர்களின் அனுபவங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்த வழிமுறைகளை கற்றுக் கொள்ளலாம் என்றார்.

முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹூசைன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க மதுரை கூட்டமைப்பின் தலைவராக சரவணக்குமார், துணைத் தலைவராக கபூர் ஹசன், செயலாளராக முத்துக்குமார், துணைச் செயலாளராக ஜூபிடர் அலி, செயற்குழு உறுப்பினராக பாட்சா, செல்வராஜன், வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பேராசிரியர் வெங்கடேஷ்பாபு நன்றி கூறினார்.

No comments :

Post a Comment