Saturday, February 7, 2015
பிப்ரவரி 8ம் தேதி இராமநாதபுரத்திலும், பிப்ரவரி 18ம் தேதி கீழக்கரையிலும் இலவசகண் சிகிச்சை முகாம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் அரசு தலைமை மருத்து வமனை, மதுரை மீனாட்சி மிஷன், ராமேசுவரம் சங்கர நேத்திராலயா, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத் துவ மனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகி யவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளது.இதன்படி நாளை (8–ந்தேதி) ராமநாதபுரம் நக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 9–ந்தேதி சத்தி ரக்குடி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திலும், 10–ந் தேதி வழுதூர் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளி, பாம் பன் சின்னப்பாலம் பஞ்சா யத்து யூனியன் பள்ளி ஆகிய வற்றிலும், 13–ந்தேதி பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 17–ந் தேதி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 18–ந்தேதி கீழக்கரை பஞ்சா யத்து யூனியன் பள்ளியிலும் இலவச கண் சிகிச்சை முகாம் கள் நடைபெற உள்ளது.
இதேபோல 19–ந்தேதி ஆர். எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 22–ந்தேதி கமுதி கவுரவா உயர்நிலைப்பள்ளியிலும், 23–ந்தேதி தேவிபட்டினம் கல்யாண மண்டபத்திலும், 24–ந்தேதி பெருங்குளம் பஞ் சாயத்து யூனியன் பள்ளி, பர மக்குடி ஆயிர வைசிய நலச் சங்கம், பி.கொடிக்குளம் கல் யாண மண்டபம், முதுகு ளத் தூர் அரசு தாலுகா மருத்து வமனை ஆகியவற்றிலும், 25–ந்தேதி வாலிநோக்கம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி யிலும், 28–ந்தேதி கமுதி கவு ரவா உயர்நிலைப்பள்ளியிலும் இலவச கண் சிகிச்சை முகாம் கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண் சம்பந்தப்பட்ட பிரச்சி னைகளுக்கு உரிய பரிசோ தனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடையலாம்.
No comments :
Post a Comment