(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 28, 2015

ராமேசுவரம் கோயில் பிப்ரவரி மாத வருவாய் ரூ.71 லட்சம்

No comments :
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்னும் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

பிப்ரவரி மாதத்துக்கான உண்டியல் எண்னும் பணி வெள்ளிக்கிழமை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் வெளிநாட்டு பணம் உள்பட 71 லட்சத்து 44 ஆயிரத்து 113 ரூபாயும், 85 கிராம் தங்கமும், 5 கிலோ 950 கிராம் வெள்ளியும் இருந்தன.


உண்டியல் எண்னும் பணியில் திருக்கோயிலின் மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், ககாரின் ராஜ், முதுநிலை கணக்கீட்டாளர் சண்முகநாதன்,ஆலய பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment