Sunday, February 8, 2015
கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா 34ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா – பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லாஹ், MLA பங்கேற்று சிறப்பித்தார்.
கீழக்கரை ஹைரத்துல்
ஜலாலியா பள்ளியின் 34ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லாஹ்,
MLA பங்கேற்று சிறப்பித்தார்.
கீழக்கரை ஹைரத்துல்
ஜலாலியா 34ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நேற்று 7-2-2015 அன்று நடைபெற்றது.
மனித நேய மக்கள் கட்சியைச்சேர்ந்த, இராமநாதபுர சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லாஹ், பங்கேற்று சிறப்பித்தார்.
கீழக்கரை நகர் மன்ற தலைவி, திருமதி.ராபியத்துல் காதிரியா, பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கு கொண்டு வாழ்த்தினர்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
பேசுகையில் சட்டமன்ற உறுப்பினர் நிதி தொகையிலிருந்து கல்விக்காகவே அதிகமாக செலவிடப்பட்டதை
சுட்டிக்காட்னார். கீழக்கரை மக்தூமியா, இஸ்லாமியா பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட நிதியையும்
குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின்
நிறைவில், 10ம் மற்றும் 12ம் வகுப்பு சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பேராசிரியர்
சார்பாக ரொக்க்கப்பரிசும் வழங்கப்பட்டது.
செய்தி: திரு. இர்ஃபான், தமுமுக
செய்தி: திரு. இர்ஃபான், தமுமுக
No comments :
Post a Comment