(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 11, 2015

கத்தார் விளையாட்டு தினத்தில் 25,000 ரியால் வெற்றி பெற்ற தமிழர் திரு.அப்துல் பாரி.

No comments :
கத்தார் விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கத்தார் ஒலிம்பிக் கமிட்டி இரண்டாவது முறையாக ”Be-Fit எடை குறைப்பு போடட்டிகள்” நடத்தியது. இதில் குறிப்பிட்ட தவணையில் அதிக எடை குறைப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்திருந்தது.

இதில் திருச்சியைச்சேர்ந்த திரு.அப்துல் பாரி அவர்கள் 26 கிலோ குறைத்து இரண்டாம் பரிசாக கத்தார் ரியால் 25,000/- வென்றெடுத்தார்.

முதல் பரிசு 100,000 ரியால் கரம் அலி (37.2 கிலோ இழந்தது) மூன்றாம் பரிசு 10,000 ரியால் சவ்சன் யஹ்யா (இழந்தது 19.9kg).


கத்தார் மன்னர் குடும்பத்தைச்சார்ந்த ஷேக் சவூத் பின் அப்துர்ரஹ்மான் அல் தானி மற்றும் மெஷல் அல் கலிஃபா ஆகியோர் பரிசுகளை வழங்கி கெளரவித்தனர்.

இந்த போட்டியின் முயற்சியின் பின்னால் முக்கிய நோக்கம் அனைத்து கத்தாரி சமூகத்தின் சுகாதார மற்றும் சமூக நலன்கள் கருத்தில் கொண்டே என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வாழ்த்துக்கள் திரு.அப்துல் பாரி

No comments :

Post a Comment