முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 28, 2024

ஜித்தா மாநகரில் இந்தியன் வெல்ஃபேர் ஃபேரம் நடத்திய 94 வது சவூதி அரேபியா தேசிய தினம்!!

No comments :

(27-09-2024) வெள்ளிக்கிழமை மாலை சவூதி அரேபியா ஜித்தா மாநகரில் இந்தியன் வெல்ஃபேர் ஃபேரம் நடத்திய 94 வது சவூதி அரேபியா தேசிய தினம் நிகழ்ச்சி நடை பெற்றது.

 





நிகழ்ச்சியில் நமது *கீழை சவூதி அமைப்பு* சிறந்த தொண்டு நிறுவனமாக தேர்ந்தெடுத்து  மாண்புமிகு தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் ஜனாப் ப. அப்துல் சமது (தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்)MLA அவர்களது கரங்களால் *மனிதநேயப்பண்பாளர்கள்* என்ற சிறப்பு விருது நமது அமைப்புக்கு வழங்கப்பட்டது .

 

நிகழ்ச்சியில் நமது கீழை சவூதி அமைப்பு சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் MLA அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

 

செய்தி: ஹமீது ராஜா, கீழை


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, September 20, 2024

இராமநாதபுரம் - கீழக்கரை உயர்மட்ட பாலம் இன்று திறக்கப்பட்டது!!

No comments :

இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் இன்று (20.09.2024) ரூ.25.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

 



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள்,

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,

சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள்

 

ஆகியோர் பங்கேற்றனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, August 14, 2024

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 17 "லஞ்ச" வழக்குகள், ரூ.4 லட்சத்துக்கு மேல் லஞ்சப்பணம் பறிமுதல்!!

No comments :

ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கு திடீர் சோதனையின் போது பணம் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்குகளில் 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 


 

அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேற்கண்ட லஞ்ச புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டிருந்த மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனடியாக சரிசெய்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இதேபோல் கடந்த ஆண்டு மாவட்டத்தில் லஞ்சம் கேட்டு பெற்றதாக 5 வழக்குகளும், திடீர் சோதனையின் போது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் மொத்தம் ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டு அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின் குறைகள் உடனே தீர்த்து வைக்கப்ப டும்.

 

மேலும் பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கொடுக்கலாம். அதன்படி 9498215697 மற்றும் 9498652159 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

 

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தெரிவித்தார்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, July 9, 2024

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான மகளிர் இறகுப்பந்து போட்டி!!

No comments :

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு இறகு பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான  மகளிர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும்  VTeam(NGO) - இணைந்து, 07.07.2024 (ஞாயிறுக்கிழமை) அன்று இராமநாதபுரம் SDAT உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடத்தியது.

 



 இப்போட்டிக்கு,

தலைமை விருந்தினராக திரு. துரை ஐ.பி.எஸ் அவர்கள், 

கெளரவ விருந்தினர்களாக திரு. M.தினேஷ் குமார் (மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்) 

திரு. KBM நாகேந்திர சேதுபதி (ராஜா - இராமநாதபுரம் மற்றும் புரவலர் - இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம்,

MMK முஹம்மது காசிம் மரைக்காயர் - பொறுப்பாளர் VTeam

மற்றும்

வள்ளல் காளிதாஸ் - இணைச்செயலாளர்  இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம்

ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். 

இந்த போட்டி  பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவு மகளிர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

இதில் 70 பெண்கள் கலந்து கொண்டனர். 24 தனி நபர்களுக்கு முதல் பரிசு ரூ 3000 + கேடயம்  மற்றும் இரண்டாம் பரிசு ரூ. 1500 + கேடயம் வழங்கப்பட்டது. 

 


இறுதியில் வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும், புரவலர்களுக்கும், நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

செய்தி: கீழை ஹமீது ராஜா, பயிற்சியாளர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, June 12, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் விலையில்லா மரக்கன்றுகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்திட விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

 

ராமநாதபுரம் வன விரிவாக்கச் சரகத்தின் கீழ் பரமக்குடி அருகே கமுதகுடி கிராம வனத் துறை மத்திய நாற்றங்காலில்

மகாகனி,

மா,

வேங்கை,

கொய்யா,

புளி,

வேம்பு,

மாதுளம்,

சொர்க்கம்

ஆகிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 


ராமநாதபுரம் மாவட்ட மக்கள் விவசாய நிலம், பள்ளிக் கூடம், பொது இடம், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க, தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா (தேவைப்படின்)ஆகியவற்றை சமர்பித்து விலையில்லா மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

தொடர்புக்கு,

வனசரக அலுவலர் வெ.நாகராஜன் 6383940433.

வனவர் கேசவன் 9976969370.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, June 6, 2024

ராமநாதபுர மக்களவை தொகுதியை தக்கவைத்தது திமுக கூட்டணி!!

No comments :


திமுக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ்கனி செய்தியாளரிடம் கூறும்போது,

‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களுக்காக மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றியாகும். இங்கு சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டி உள்ளது.




  

பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலையோர ரயில் போக்குவரத்து திட்டம் துவங்கவும், படித்த இளைஞர்கள் பெண்களின் நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை அமைக்கவும், ராமேஸ்வரம் ஆன்மீக தேசிய சுற்றுலா தளம் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்டம் வர்த்தக மாவட்டமாக இருப்பதாலும் விமான போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, May 31, 2024

மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் அவசியம் – கலெக்டர் உத்தரவு!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்துவது அவசியம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945ல் அட்டவணைகள் குறிப்பிட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் இன்றைய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

 


தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்டறியப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது மேற்கண்ட இந்த உத்தரவினை பின்பற்றாத காரணத்திற்காக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, May 7, 2024

+2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.89 சதவீத தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 17வது இடம் பிடித்துள்ளனர். 

 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது.

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 63 மையங்களில்

71 அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

36 அரசு உதவி பெறும் பள்ளிகள்,

53 மெட்ரிக் பள்ளிகள்,

ராமநாதபுரம் மாதிரி பள்ளி ஒன்று

 

என 161 பள்ளிகளிலிருந்து 6,302 மாணவர்களும், 7,247 மாணவிகளும் என மொத்தம் 13,549 பேர் தேர்வு எழுதினர்.

 

இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வந்த நிலையில் 5,850 மாணவர்கள், 7,007 மாணவிகள் என 12,857 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

இதில் மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவிகள் 96.69 சதவீதம் என மொத்தம் 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

 

இதில் 71 அரசு மேல்நிலை பள்ளிகளில் 19 பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 பள்ளிகளும், 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37 பள்ளிகள் என மொத்தமுள்ள 161 பள்ளிகளில் 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, May 2, 2024

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றுபவர்கள் முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த விருது ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.

15 முதல் 35 வயது வரை உள்ள தலா மூன்று ஆண், பெண்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்.

 


2023--24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் பரிசீலிக்கப்படும். 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைதள முகவரியில்(www.sdat.tn.gov.in) விண்ணப்பங்களை மே 15 க்குள் சமர்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர்நலன் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.