(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 24, 2015

கீழக்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை: அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!!

No comments :
கீழக்கரையில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் முருகேசன் எச்சரித்துள்ளார்.


இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கீழக்கரை நகராட்சிப் பகுதியில் நடைபெறும் திருமணம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்காக வைக்கப்படும் டிஜிட்டல் விளம்பர பேனர்கள், தட்டி போர்டுகளுக்கு அனுமதி பெறவேண்டும்.




இது குறித்த மாவட்ட கலெக்டர் அறிவிப்பு படிக்க: இங்கு க்ளிக் செய்யவும்

விளம்பரம் குறித்த நோக்கம், அளவு, வரைபடத்துடன் கூடிய இடங்கள், வாசகங்கள் ஆகியவற்றை பத்து நாள்களுக்கு முன்பாக காவல் துறையில் விண்ணப்பிக்க வேண்டும். காவல் துறையின் அனுமதி கிடைத்தவுடன், பரிந்துரை கடிதத்துடன் நகராட்சியில் மனு செய்திட வேண்டும். பின்னர், அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விளம்பரக் கட்டணத்தை செலுத்தி, ரசீதுடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரத்தில் ஒரு அங்குல அளவுக்கு அனுமதி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.


குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பேனரை அகற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment