Wednesday, February 19, 2025
கீழக்கரையில் பிப்-21ம் தேதி UPSC - TNPSC போட்டி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்!!
போட்டி
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உற்சாகமான செய்தி!
கீழக்கரையில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு அழைப்பு! யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுத் தேர்வுகளில்
தேர்ச்சி பெற விரும்புகிறீர்களா?
21 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கீழக்கரையில் உள்ள விழிப்புணர்வு
நிகழ்ச்சிக்கு எங்களுடன் சேருங்கள்.
போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற உங்களுக்கு உதவும் வாய்ப்புகள் மற்றும் ஆதாரங்களைக்
கண்டறியவும். எங்கள் நிபுணர்கள்
உங்களுக்கு வழிகாட்டுவார்கள்:
தேர்வுக்கான தயாரிப்பு
உத்திகள்
படிப்பு பொருட்கள்
மற்றும் ஆதாரங்கள்
தொழில் வாய்ப்புகள்
மற்றும் வளர்ச்சி
இடம்: தக்வா
அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ், KECT மஸ்ஜித் வளாகம், நியூ ஈஸ்ட் தெரு, கீழக்கரை-623517
இப்போது பதிவு செய்யவும்: https://forms.gle/naYmkJogurQB4ySNA
உங்களை மேம்படுத்தி
உங்கள் திறனைத் திறக்க இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தமிழ்நாட்டின் ஒளிமயமான
மனங்களை வடிவமைப்பதில் ஒரு பகுதியாக இருங்கள்!
Saturday, February 1, 2025
கீழக்கரை நூரானியா பள்ளியில் தற்காப்பு கலை குறித்த கருத்தரங்கம், ஸ்பெயின் வீரர் பங்கேற்பு!!
இராமநாதபுரம் Elite Martial Arts சார்பில் நடந்த இன்டர் ஸ்கூல் போட்டிக்கு நடுவராக
வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச்
சேர்ந்த
Mixed Martial Arts jiu jitsu Champion Prof. ஃபெர்னான்டோ
கீழக்கரை நூரானியா பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு இக்கலையைப் பற்றி போதித்தார்.
தற்காப்புக் கலை பற்றி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவருக்கு பள்ளி சார்பில் மேலாளர் சுபைர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அவருடன்
elite உமர் முக்தார் மற்றும் ஹமீது ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.
Monday, January 20, 2025
இராமநாதபுரத்தில் சர்வதேச பிரேசிலியன் ஜியூ-ஜிட்ஸு செமினார் & பயிற்சி முகாம்!!
சர்வதேச பிரேசிலியன் ஜியூ-ஜிட்ஸு செமினார் & பயிற்சி முகாம்
தேதி: ஜனவரி 26, 2025
இடம்: இராமநாதபுரம்
7 முறை ஐரோப்பிய சாம்பியன் மற்றும் 5 முறை உலக சாம்பியன் ஆகியவருடன் பயிற்சியில் கலந்து கொள்ள இப்பொழுதே வருக!
நிகழ்ச்சி அட்டவணை:
• பதிவுபெறுதல்: காலை
6:00 am முதல் 7:00am வரை
• பயிற்சி முகாம்: காலை 7:00 முதல் 9:00am வரை
யார் கலந்து கொள்ளலாம்:
• புதியவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்! கலைகளில் முன் அனுபவம் தேவையில்லை.
சிறப்பு அம்சங்கள்:
·
ராப்பிள் டிரா பரிசு: 8 கிராம் தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பு!
·
பதிவு கட்டணம்: ₹999/-
·
விதிமுறைகள்: 85 பேர் பதிவு செய்யப்பட்டது உறுதியாக இருந்தால் மட்டுமே ராப்பிள் டிரா நடைபெறும்.
பதிவிற்கான தொடர்பு:
சிறந்தவர்களுடன் பயிற்சி பெறவும், பெரும் வெற்றியை அடையவும் இந்நிகழ்ச்சியை தவற விடாதீர்கள்
சாதாரண பதிவு: ₹399/-
Thursday, January 16, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் -ல் பணியாற்ற 18ம் தேதி ஆள் தேர்வு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊர்தியில் பணியாற்ற மருத்துவ
உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு வருகிற 18-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
இது குறித்து 108 அவசர ஊர்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
த.தமிழ்செல்வன் புதன்கிழமை கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகளில் அவசரகால
மருத்துவ உதவியாளர் பணிக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு பார்திபனுர் ஆரம்ப சுகாதார
வளாகத்தில் செயல்படும் 108 அவசர ஊர்தி அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 10 மணி
முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது.
தகுதி:
வயது 19-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி நர்சிங்,
ஜிஎன்எம், டிஎம்எல்டி, ஏஎன்எம் (12 ஆம் வகுப்புக்குப் பிறகு 2
ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பிஎஸ்சி விலங்கியல்,
தாவரவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
முதலில் எழுத்துத் தேர்வு. மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி,
செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவளத் துறையின்
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மாத ஊதியமாக ரூ.15,635 வழங்கப்படும்.
ஊர்தி ஓட்டுநருக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர்
உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள், பேட்ஜ் எடுத்து ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும்.
வயது 24 முதல் 35 -க்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூ.15,450.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அசல் சான்றிதழுடன் கலந்து கொள்ள
வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் 12 மணி
நேர இரவு, பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
நேர்முகத் தேர்வுக்கு கல்வித் தகுதி, ஓட்டுநர் உரிமம், முகவரிச்
சான்று. அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 8754439544.
7397444156,7397724828 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Wednesday, January 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி தீவிரம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேசன்
கார்டுதாரர்கள் அனைவருக்கும்
முழுகரும்பு,
ஒரு கிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை 9ம் தேதி முதல் வழங்கப்படுவதையொட்டி ரேசன் கடை பணியாளர்கள்
கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் வருகின்றனர்.
நாளை மறுநாள் முதல் 13ம் தேதி வரை பொங்கல் பொருள் வழங்கப்படுவதையொட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்,
பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய தாலுகாக்களில் உள்ள 554 முழுநேர
கடைகளுக்கும், 775 பகுதிநேர கடைகளுக்கும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
பொருட்கள் இறக்கும் பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.
மேலும் ரேசன் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுவதால்,
வழக்கமான உணவு பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதே ரேசன்
கடைகள் களைகட்டி காணப்படுகிறது. மாவட்டத்தில் முழுநேர ரேசன் கடை 556, பகுதி நேர ரேசன்
கடை 228 என 784 கடை உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 107 ரேசன்
கார்டு தாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்று பயனடைவார்கள்.
Wednesday, November 27, 2024
தமிழக துணை முதல்வர் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரை திமுக சார்பில் விழா!!
கீழக்கரை நகர திமுக சார்பில் சிறப்பான விழா.
தமிழ்நாட்டின் துணை முதல்வர் திரு.உதயநிதி
ஸ்டாலின் அவர்களின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர திமுக சார்பில் சிறப்பான விழா நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கமாக நகர செயலாளர் திரு. S.A.H. பஷீர் அஹமது அவர்களின் தலைமையில் கழக அலுவலகம் அருகில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு
உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர்,
துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட
ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
செய்தி: திரு.நஸீருதின், நகர் மன்ற உறுப்பினர்
Friday, October 18, 2024
வீடுகளில் நூலகம் அமைத்துள்ளவர்கள், தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் தனி நபர் வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்துள்ள நபர்கள், தமிழக அரசின் விருது
பெற வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து
மாவட்ட நூலக அலுவலர் சி.பாலசரஸ்வதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீடுகள்
தோறும் நூலகம் அமைத்து, வாசிப்பை மேம்படுத்தி வருவோரில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும்
ஒரு நூலகத்தை தேர்வு செய்து விருது, ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கேடயம், சான்றிதழ் வழங்க
தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனடிப்படையில்,
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட புத்தக ஆர்வலர்கள், தனி நபர் இல்லங்களில் நூலகம்
அமைத்து பராமரித்து வருவோர், தங்களது நூலகத்தில் உள்ளநூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த
வகையான நூல்கள் இடம் பெற்றுள்ளன, அரிய வகை நூல்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களுடன்
தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆகியவற்றைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்கலாம்.
தகுதி
உடையவர்கள்
ராமநாதபுரம்
மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட
நூலக அலுவலம்,
டி-பிளாக்
பேருந்து நிலையம்,
வேலைவாய்ப்பு
அலுவலகம் எதிரில்,
மாவட்ட
ஆட்சியர் வளாகம்- 623503
என்ற
முகவரிக்கு நேரில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விவரங்களுக்கு 9489108841 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Saturday, September 28, 2024
ஜித்தா மாநகரில் இந்தியன் வெல்ஃபேர் ஃபேரம் நடத்திய 94 வது சவூதி அரேபியா தேசிய தினம்!!
(27-09-2024)
வெள்ளிக்கிழமை மாலை சவூதி அரேபியா ஜித்தா மாநகரில் இந்தியன் வெல்ஃபேர் ஃபேரம் நடத்திய
94 வது சவூதி அரேபியா தேசிய தினம் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியில்
நமது *கீழை சவூதி அமைப்பு* சிறந்த தொண்டு நிறுவனமாக தேர்ந்தெடுத்து மாண்புமிகு தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் ஜனாப் ப. அப்துல்
சமது (தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்)MLA அவர்களது கரங்களால் *மனிதநேயப்பண்பாளர்கள்*
என்ற சிறப்பு விருது நமது அமைப்புக்கு வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில்
நமது கீழை சவூதி அமைப்பு சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில்
MLA அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
செய்தி:
ஹமீது ராஜா, கீழை
Friday, September 20, 2024
இராமநாதபுரம் - கீழக்கரை உயர்மட்ட பாலம் இன்று திறக்கப்பட்டது!!
இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் இன்று (20.09.2024) ரூ.25.60
கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள்,
இராமநாதபுரம்
சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,
சட்டமன்ற
உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள்
ஆகியோர்
பங்கேற்றனர்.